கும்ப ராசியினருக்கு பேச்சில் கவனம் தேவை - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
3 months ago
கும்ப ராசியினருக்கு பேச்சில் கவனம் தேவை - ராசிபலன்

மேஷம்

அசுவினி: உங்கள் விருப்பம் நிறைவேறும் நாள். ஆரோக்கியம் மேம்படும். இழுபறியாக இருந்த முயற்சி வெற்றியாகும். பரணி: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். உங்கள் முயற்சிக்குரிய ஆதாயம் இழுபறியாகும். கார்த்திகை 1: ஏழாமிட சந்திரனால் மனதில் தெளிவு உண்டாகும். தொழில் முன்னேற்றம் அடையும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: திட்டமிட்டு செயல்படுவீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும்.ரோகிணி: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். நீண்டநாள் பிரச்னை ஒன்று உங்களை சங்கடப்படுத்தும்.மிருகசீரிடம் 1,2: உடலில் இருந்த சங்கடம் நீங்கும். எதிரிகள் உங்களிடம் சரண் அடைவார்கள்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: வருமானத்தில் இருந்த தடைகள் விலகும். பெரியோர் ஆதரவால் உங்கள் முயற்சி வெற்றியாகும். திருவாதிரை: அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரிசெய்வீர்கள். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.புனர்பூசம் 1,2,3: அமைதி காக்க வேண்டிய நாள். தேவையற்ற பிரச்னைகள் தேடிவரும்.

கடகம்

புனர்பூசம் 4: திட்டமிட்டிருந்த செயல்களில் மாற்றம் செய்வீர்கள். உங்கள் முயற்சி இழுபறியாகும். பூசம்: குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தாய்வழி உறவுகளால் ஆதாயம் ஏற்படும். ஆயில்யம்: அவசர செயல்களால் சங்கடம் உண்டாகும் நாள். வியாபாரத்தில் கூடுதல் கவனம் தேவை.

சிம்மம்

மகம்: விருப்பம் நிறைவேறும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும்.பூரம்: நினைத்ததற்கு மாறான செயல்கள் நடைபெறும். வியாபாரத்தில் பிரச்னைகள் உருவாகும். உத்திரம் 1: எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். பெரியோர் ஆதரவுடன் பிரச்னைக்கு முடிவு காண்பீர்கள்.

கன்னி

உத்திரம் 2,3,4: குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் விலகி மகிழ்ச்சியான நிலை ஏற்படும். பொன்பொருள் சேர்க்கை உண்டு. அஸ்தம்: வியாபாரத்தில் எதிர்பாராத தடைகள் உருவாகும். வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை தேவை. சித்திரை 1,2: அடுத்தவர் நலனில் அக்கறை கொள்வீர்கள். உங்கள் செயல் மற்றவர்களால் பாராட்டப்படும்.

துலாம்

சித்திரை 3,4: உங்கள் அணுகுமுறையால் நீண்டநாள் பிரச்னை முடிவிற்கு வரும். வருமானம் அதிகரிக்கும்.சுவாதி: மனதில் உற்சாகம் அதிகரிக்கும். நீங்கள் விரும்பிய வகையில் செயல்பட்டு நினைத்ததை அடைவீர்கள்.விசாகம் 1,2,3: மனதில் குழப்பம் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் தள்ளிப்போகும்.

விருச்சிகம்

விசாகம் 4: அலுவலகத்தில் மேலதிகாரியுடன் மோதல் ஏற்படும். நிதானம் காப்பது நன்மையாகும்.அனுஷம்: உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். வரவேண்டிய பணம் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.கேட்டை: வெளியூர் பயணத்தால் மனதில் சோர்வு உண்டாகும். புதிய முயற்சி இழுபறியாகும்.

தனுசு

மூலம்: நீங்கள் எதிர்பார்த்த பணம் இன்று உங்களைத்தேடி வரும். நவீன பொருட்கள் வாங்குவீர்கள். பூராடம்: விவேகத்துடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் கவனக்குறைவால் இன்று சில சங்கடங்களை சந்திப்பீர்கள்உத்திராடம் 1: பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: வியாபாரத்தை விருத்தி செய்வதற்குரிய வழிகளைக் கண்டறிவீர்கள். உங்கள் முயற்சி வெற்றியாகும்.திருவோணம்: நேற்றைய நிலை மாறும். இன்று உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். பணத்தேவை அதிகரிக்கும்.அவிட்டம் 1,2: நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலையை இன்று செய்து முடிப்பீர்கள்.

கும்பம்

அவிட்டம் 3,4: நண்பர்கள் ஆதரவுடன் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். வரவு அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். சதயம்: உங்கள் விருப்பங்கள் இன்று பூர்த்தியாகும். வெளியூர் பயணத்தால் ஆதாயம் உண்டாகும்.பூரட்டாதி 1,2,3: உங்களுக்கு பிடிக்காத சில சம்பவங்கள் இன்று நடந்தேறும். பேச்சில் கவனம் தேவை.

மீனம்

பூரட்டாதி 4: வழிபாட்டால் நன்மைகள் காண வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். உத்திரட்டாதி: நேற்றுவரை இருந்த சங்கடம் விலகும். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். ரேவதி: புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பதும், அமைதி காப்பதும் நன்மையாகும்.