தனுசு ராசிக்காரர்கள் நிதானமாக செயல்பட வேண்டிய நாள் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
4 months ago
தனுசு ராசிக்காரர்கள் நிதானமாக செயல்பட வேண்டிய நாள் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: கவனமாக செயல்பட வேண்டிய நாள். முயற்சிகளில் தடைகளும் தாமதமும் உண்டாகும்பரணி: திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். உடல்நிலை சீராகும்.கார்த்திகை 1: வெளியூர் பயணத்தில் சில சங்கடங்களை சந்திப்பீர்கள். யோசித்து செயல்பட வேண்டிய நாள்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: உங்கள் செயல்களில் நீங்கள் நினைத்ததற்கு மாறாக சில மாற்றங்கள் உண்டாகும். ரோகிணி: வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். பொன்பொருள் சேர்க்கை ஏற்படும். மிருகசீரிடம் 1,2: தொழிலில் உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். மந்தநிலை உண்டாகும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: உத்தியோகத்தில் அடுத்தவர் செய்யும் தவறுக்கு நீங்கள் பதில் சொல்ல நேரும்.திருவாதிரை: விவேகமுடன் செயல்பட்டு வெற்றி காணும் நாள். தடைபட்டிருந்த வருவாய் வந்துசேரும்.புனர்பூசம் 1,2,3: உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். தொழில் கூட்டாளிகளுடன் இருந்த சங்கடம் நீங்கும்.

கடகம்:

புனர்பூசம் 4: எதிர்பார்த்த பணம் வந்துசேரும். உறவினர் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். பூசம்: சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். உங்கள் முயற்சியில் தடையும் தாமதமும் உண்டாகும்.ஆயில்யம்: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். திட்டமிட்ட வேலைகள் நடந்தேறும். 

சிம்மம்

மகம்: உறவுகளால் சங்கடங்கள் தோன்றும் நாள். மனம் குழப்பமடையும். தேவையற்ற பிரச்னைகள் தேடிவரும்.பூரம்: சங்கடங்கள் விலகும் நாள். உங்கள் முயற்சியால் அனைத்தையும் சரிசெய்வீர்கள். உத்திரம் 1: பழைய கடன்களால் சங்கடங்கள் உண்டாகும். வியாபாரத்தை விரிவு செய்வது குறித்து ஆலோசிப்பீர்கள். 

கன்னி

உத்திரம் 2,3,4: நெருக்கடிக்கு ஆளாகும் நாள். துணிச்சலுடன் செயல்படுவீர்கள். உங்கள் முயற்சி நிறைவேறும். அஸ்தம்: வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறை வெற்றியாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பால் லாபம் அதிகரிக்கும்.சித்திரை 1,2: தடைகளைத் தாண்டி வெற்றியடையும் நாள். முயற்சியில் கவனம் அவசியம். 

துலாம்

சித்திரை 3,4: குடும்பத்தில் சிறு குழப்பங்கள் தோன்றி மறையும். வரவு செலவில் சங்கடம் உண்டாகும். சுவாதி: வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விசாகம் 1,2,3: நினைப்பதை சாதிக்கும் நாள். எதிர்பார்த்த பணம் வந்துசேரும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். 

விருச்சிகம்

விசாகம் 4: நீண்ட நாட்களாக முடியாமல் இருந்த உங்கள் வேலை இன்று முடியும்.அனுஷம்: வேலைப்பளு அதிகரிக்கும். சிலருக்கு பணியிடத்தில் பிரச்னை உண்டாகும். அமைதி காப்பது நல்லது. கேட்டை: ஆதாயமான நாள். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். 

தனுசு

மூலம்: செலவுகள் அதிகரிக்கும் என்பதால் நிதானமாக செயல்பட வேண்டிய நாள். பூராடம்: உங்கள் முயற்சி வெற்றியாகும் நாள். அலுவலகத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். உத்திராடம் 1: எதிர்பாராத பயணமும் அலைச்சலும் உண்டாகும். பொருளாதார நெருக்கடிக்கு ஆளாவீர்கள். 

மகரம்

உத்திராடம் 2,3,4: உங்கள் வேலைகளில் தடைகள் ஏற்படும். கவனமாக செயல்படுவதால் எதிர்பார்ப்பு நிறைவேறும்திருவோணம்: நெருக்கடிகள் நீங்கும் நாள். எதிர்பார்த்த வருவாய் வந்து சேரும். உங்கள் செயல்கள் வெற்றியாகும். அவிட்டம் 1,2: வெளியூர் பயணம் சோர்வை உண்டாக்கும். உடல்நிலையில் சிறு சங்கடம் தோன்றும். 

கும்பம்

அவிட்டம் 3,4: உங்கள் முயற்சி இழுபறியாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் போகும். சதயம்: பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். இழுபறியாக இருந்த விவகாரம் முடிவிற்கு வரும்.பூரட்டாதி 1,2,3: பணவரவில் இருந்த தடைகள் விலகும். வியாபாரத்தை விரிவு செய்வீர்கள். 

மீனம்:

பூரட்டாதி 4: வேலையில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். வரவேண்டிய பணம் வந்துசேரும். உத்திரட்டாதி: மனதில் குழப்பம் அதிகரிக்கும். பணியிடத்தில் மறைமுகத் தொல்லை உண்டாகும். ரேவதி: இழுபறியாக இருந்த வேலை இன்று நிறைவேறும். வியாபாரத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!