ரஜினிகாந்திற்கு கோல்டன் விசா வழங்கி கௌரவித்த UAE

#Actor #government #UAE #Gold #Visa #Kollywood #Indian
Prasu
10 months ago
ரஜினிகாந்திற்கு கோல்டன் விசா வழங்கி கௌரவித்த UAE

ஐக்கிய அரபு அமீரக அரசு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை கவுரவிக்க கோல்டன் விசா வழங்கி வருகிறது. 

கோல்டன் விசா வைத்து இருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஐக்கிய அமீரகத்தின் குடிமகன்களாக கருதப்படுவார்கள்.

இந்திய நடிகர்கள் பலருக்கு ஐக்கிய அமீரகத்தின் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. நடிகர்கள் சஞ்சய் தத், ஷாருக்கான், மம்முட்டி, மோகன்லால், பிருதிவிராஜ், துல்கர் சல்மான், கமல்ஹாசன் ஆகியோர் கோல்டன் விசா பெற்றுள்ளனர்.

நடிகைகள் மீரா ஜாஸ்மின், திரிஷா, ஜோதிகா, அமலா பால், லட்சுமி ராய், காஜல் அகர்வால், பாடகி சித்ரா மற்றும் இயக்குனரும் நடிகருமான ஆர்.பார்த்திபன், நடிகர் விஜய் சேதுபதி ஆகியோருக்கும் அமீரக அரசு கோல்டன் விசா வழங்கியுள்ளது.

இந்நிலையில், சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்திற்கு கோல்டன் விசா வழங்கி ஐக்கிய அரபு அமீரக அரசு கவுரவப்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக ரஜினிகாந்த் கூறுகையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசிடம் இருந்து விசா அங்கீகாரம் பெற்றதற்கு பெருமைப் படுகிறேன் என தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!