உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய தமிழர்

#sports #Gold #Indian #Olympics
Prasu
3 weeks ago
உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய தமிழர்

உலக பாரா தடகளம் உயரம் தாண்டுதலில் தமிழகத்தின் மாரியப்பன் தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.

ஜப்பானில் மாற்று திறனாளிகளுக்கான உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் நடக்கிறது. நேற்று ஐந்தாவது நாள் போட்டி நடந்தன. 

ஆண்களுக்கான 'டி63' உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியா சார்பில் மாரியப்பன் தங்கவேலு, வருண் சிங், ராம்சிங்பாய் களமிறங்கினர். 

பாராலிம்பிக் 2016ல் தங்கம் (ரியோ), 2021ல் வெள்ளி (டோக்கியோ) கைப்பற்றிய மாரியப்பன், நேற்று மீண்டும் அசத்தினார். 1.88 மீ., உயரம் தாண்டிய மாரியப்பன் தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.

சர்வதேச அரங்கில் 8 ஆண்டுக்குப் பின் இவர் வென்ற தங்கம் இது. தவிர பாரா தடகளம் சாம்பியன்ஷிப் சாதனையாகவும் இது அமைந்தது.

அமெரிக்காவின் எல்ரா பிரெச் (1.85 மீ.,), சாம் கிரீவ் (1.82 மீ.,) அடுத்த இரு இடம் பிடித்து வெள்ளி, வெண்கலம் கைப்பற்றினர். வருண் சிங்கிற்கு (1.78 மீ.,) நான்காவது இடம் கிடைத்தது.