ஜப்பானில் சட்டவிரோத கருகலைப்பு தொடர்பில் இரு இலங்கையர்கள் கைது!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
ஜப்பானில் சட்டவிரோத கருகலைப்பு தொடர்பில் இரு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் அங்கு IT தொழில்நுட்ப பிரிவில் படித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சர்வதேச மாணவர்களின் நிலையற்ற குடியுரிமை இந்த சம்பவத்திற்கு பின்னணியில் ஒரு காரணியாக இருக்கலாம் என நிபுணர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர்கள் முன்னதாக வைத்தியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் ஜப்பானிய சட்டப்படி கருகலைப்பிற்கான காலம் தாண்டிய நிலையில், அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பெண் போதை மாத்திரைகளை உட்கொண்டு கருகலைப்பை செய்துள்ளார்.
இந்த பின்னணியில் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதுடன், அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே