மழையுடன் கூடிய வானிலையே இன்றும் தொடரும் என முன்னறிவிப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
மழையுடன் கூடிய வானிலையே இன்றும் தொடரும் என முன்னறிவிப்பு!

வளிமண்டலவியல் திணைக்களத்தின் கூற்றுப்படி, தென்மேற்கு பருவக்காற்று நிலைமை காரணமாக தற்போதுள்ள மழை மற்றும் காற்றின் நிலைமைகள் மேலும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. 

சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் சில இடங்களில்  100மி.மீற்றருக்கும் மேற்பட்ட கனமழை பெய்யும். 

 மேலும் மேற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்  75 மி.மீற்றர் வரை பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் ஓரளவு மழை பெய்யக் கூடும் எனவும் கிழக்கு மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக் கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4