குஜராத்தில் இடம்பெற்ற பாரிய தீவிபத்து : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
10 months ago

இந்தியாவில் குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழந்தவர்களில் 12 சிறுவர்களும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ராஜ்கோட் நகரில் உள்ள விளையாட்டு மையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீயில் சிக்கி உயிரிழந்த பலரது உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு எரிந்துள்ளதாக கூறப்படுகிறது.
தீயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த ஐந்து பேர் கொண்ட விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதுடன், தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் வெளியிடப்படவில்லை.



