வீடொன்றின் மீது முறிந்து விழுந்த மரம் : பெண் ஒருவர் பலி!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
மோசமான வானிலை காரணமாக வீடு ஒன்றின் மீது மரம் விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மற்றொரு பெண்ணும் ஆண் ஒருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பங்கெட்டிய பிரதேசத்தில் நேற்று (25.05) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ஹப்புத்தளை, பங்கெட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 65 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
காயமடைந்தவர்கள் தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன் ஹப்புத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே