கேன்ஸ் விழாவில் விருது வென்ற இந்திய இயக்குனர்

கடந்த மே 14-ம் தேதி முதல் நடைப்பெற்று வந்த கேன்ஸ் திரைப்படவிழா நேற்று நிறவடைந்தது.
இந்திய குறும்படமான 'ஆல் வி இமேஜின் ஆஸ் லைட்' திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 40 வருடங்களுக்கு பிறகு கேன்ஸ் விழாவில் இடம் பெறும் இந்திய திரைப்படமாகும்.
பாயல் கபாடியாவின் இயகத்தில் கோலிவுட் இளம் நாயகன் ஹிருது ஹாரூன் இப்படம் உருவாகியுள்ளது.
விழாவின் முதன்மை போட்டி பிரிவில் கேன்ஸ் பாம் டி ஓர் விருதுக்காக போட்டியிடும் முதல் இந்திய திரைப்படம் என சாதனையை படைத்துள்ளது. இந்நிலையில், கேன்ஸ் திரைப்பட விழாவில் இரண்டாவது உயரிய விருதான 'கிரண்ட் பிரிக்ஸை' இந்திய திரைப்படமான "ஆல் வி இமேஜின் அஸ் லைட்" வென்றுள்ளது.
இதன் மூலம் 'கிராண்ட் பிரிக்ஸ்' வென்ற முதல் இந்திய இயக்குனராகி வரலாறு படைத்துள்ளார் பாயல் கபாடியா. பாம் டி'ஓர் விருதுக்கு அடுத்தபடியாக 'கிராண்ட் பிரிக்ஸ்' விருதுதான் கேன்ஸ் விழாவின் உயரிய விருதாகும்.
இப்படத்திற்கு விழாவில் 8 நிமிடம் படம் பார்த்து முடித்த பின் எழந்து நின்று கை தட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.



