கொழும்பை சுற்றியுள்ள பகுதிகளில் வீதியை மூட நடவடிக்கை!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
கொழும்பை சுற்றியுள்ள பகுதிகளில் வீதியை மூட நடவடிக்கை!

கொழும்பை சுற்றியுள்ள பல பிரதான வீதிகள் இன்று இரவு மூடப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கடும் காற்றுடன் மரங்கள் முறிந்து விழுவதால் ஏற்படக்கூடிய விபத்துக்களை தடுக்கும் நோக்கில் பல வீதிகள் மூடப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார். 

இதன்படி, பௌதலோக மாவத்தை மலலசேகர சந்தியில் இருந்து தும்முல்ல சுற்றுவட்டம் வரை, விஜேராம வீதி கிரிகோரி வீதி சந்தியிலிருந்து பௌதலோக வீதி வரை, பெரஹெர மாவத்தை ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை சந்தியிலிருந்து ரொட்டுண்டா சந்தி வரை மற்றும் பேபுரூக் பகுதி மூடப்படும். 

மேலும், வெசாக் வலயங்களுக்கு வரும் மக்கள் தங்களது வாகனங்களை பாதுகாப்பான இடங்களில் நிறுத்திவிட்டு அந்த வலயங்களுக்கு நடந்து செல்ல முடியும் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இதேவேளை, பாதுகாப்பற்ற மரங்களுக்கு அடியில் தங்குவதையும் வாகனங்களை நிறுத்துவதையும் அவற்றுக்குள் தங்குவதையும் தவிர்க்குமாறு பொலிஸார் மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4