ISIS பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்களை கண்டறிய விசேட விசாரணை!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
ISIS பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்களை கண்டறிய விசேட விசாரணை!

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் இந்நாட்டில் இருக்கிறார்களா என்பதைக் கண்டறிய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது அவசர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.  

கடுவெல பிரதேசத்தில் இன்று (26) இடம்பெற்ற வெசாக் திருவிழாவில் கலந்து கொண்ட பொலிஸ் மா அதிபர் இதனை அறிவித்தார்.  

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் தாக்குதல் நடத்துவதற்குத் தயாராக இலங்கையிலிருந்து அகமதாபாத் நகருக்கு வந்த இலங்கை ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த நான்கு பேர் அண்மையில் அகமதாபாத் சர்தார் பட்டேல் சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

அதன்படி ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய மேலும் பலர் நாட்டில் உள்ளதா என்பது குறித்து பாதுகாப்பு தரப்பினரால் தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4