மஹிந்தவினால் கட்டமைக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்க்க பாரிய சதி இடம்பெற்றுள்ளது - நாமல்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
மஹிந்தவினால் கட்டமைக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்க்க பாரிய சதி இடம்பெற்றுள்ளது - நாமல்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கட்டமைக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்க்க நாட்டில் பாரிய சதி இடம்பெற்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

இதற்கு எதிராக அரசாங்கத்திற்குள்ளேயே பல்வேறு சக்திகள் செயற்பட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், அரசாங்கத்துக்குள் இருந்துதான் சதி உருவானது. சர்வதேச சக்திகளும்,பயங்கரவாத அமைப்புகளும் அரசாங்கத்தை கவிழ்க்க செயற்பட்டன. 

அதன் பலனாக நல்லாட்சி அரசாங்கம் உருவானது. ஆனால் மஹிந்த ஒப்படைத்த அரசாங்கத்தை கோத்தபாய ராஜபக்ச கைப்பற்றினார். இது ஒரு தோல்வியுற்ற அரசாங்கம்." எனத் தெரிவித்துள்ளார்.    

இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது தொகுதி மாநாடு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் தலாவ நகரில் ஆரம்பமானது.

 “இரஜரட்டனில் இருந்து போர் ஆரம்பமாகட்டும்” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த தொகுதி மாநாட்டில் பொது மக்கள் முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.  

இந்த மாநாடு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இடம்பெற்ற போதும் அவர் மாநாட்டில் உரையாற்றாதமை விசேட அம்சமாகும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4