கொழும்பு - வர்த்தக நிலையமொன்றில் துப்பாக்கி முனையில் கொள்ளை!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
கொழும்பு - வர்த்தக நிலையமொன்றில் துப்பாக்கி முனையில் கொள்ளை!

கொள்ளுப்பிட்டியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் உள்ள கடையொன்றில் 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான கைதொலைபேசிகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சந்தேகநபர் திடீரென கடைக்குள் புகுந்து துப்பாக்கியை காட்டி கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

குறித்த நபர் கொள்ளையிட்ட பின்  மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4