இலங்கையில் ஸ்டார்லிங்க் சேவையை 03 மாதங்களில் தொடங்க திட்டம்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
10 months ago

கோடீஸ்வரரான எலோன் மஸ்க் நிறுவிய Starlink செயற்கைக்கோள் இணைய சேவையை இன்னும் மூன்று மாதங்களுக்குள் தொடங்குவதற்கு இலங்கை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதியின் மூத்த ஆலோசகர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
எலோன் மஸ்க் இணைய சேவையை தொடங்குவதற்கான விண்ணப்பத்தை ஏற்கனவே அனுப்பியுள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Starlink அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் இலங்கையில் SpaceX நிறுவனத்தை ஆரம்பிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எலோன் இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையிலும் ஆர்வமாக இருப்பதாக கூறிய அவர், இலங்கைக்கு விஜயம் செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.



