நமது கஸ்டங்கள் தீர எளிய வழிபாடு!
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கஷ்டங்கள் இருக்கும். இந்த கஷ்டங்கள் ஏற்படுவதற்கு முக்கியமான காரணமாக திகழ்வது நவக்கிரகங்களே.
ஒருவருடைய ஜாதகத்தில் எந்த அமைப்பில் ஜாதகங்கள் இருக்கிறார்களோ அதற்கு ஏற்றார் போல் தான் நம்முடைய வாழ்க்கையும் அமையும் என்று கூறப்படுகிறது.
நல்ல கிரகங்கள் ஒன்றாக சேரும் பொழுது நன்மைகளும் தீய கிரகங்கள் பார்க்கும் பொழுது தீமைகளும் ஏற்படும்.
இப்படி நவகிரகங்களால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் தீர்வும் மன நிம்மதி ஏற்படவும் கஷ்டங்கள் மறையவும் செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மிகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
நவதானிய நவகிரஹ பரிஹாரம் சூரியன், திங்கள், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு மற்றும் கேது இவர்களை அடிப்படையாகக் கொண்டுதான் ஒருவருடைய வாழ்க்கை நிர்ணயிக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது.
இதில் நமக்கு கஷ்டங்கள் தரக்கூடிய கிரகங்களாக சில கிரகங்கள் இருக்கின்றன. நன்மைகள் செய்யக்கூடிய கிரகங்களாகவும் சில கிரகங்கள் இருக்கின்றன.
கிரகங்கள் எந்த கிரகத்துடன் சேர்கிறதோ அதற்கேற்றார் போல் பலனும் நமக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இப்படி ஜோதிடர் ரீதியாக பல வழிமுறைகளை வகுத்திருக்கிறார்கள்.
எப்பேர்பட்ட சூழ்நிலையாக இருந்தாலும் ஜாதகத்தில் நவகிரகங்கள் எந்த அமைப்பில் இருந்தாலும் நமக்கு ஏற்படக்கூடிய கஷ்டங்கள் தீர்வதற்கு செய்யக்கூடிய ஒரு பரிகாரத்தை பார்ப்போம். இந்த பரிகாரத்தை என்றைக்கு வேண்டுமானாலும் நாம் ஆரம்பிக்கலாம்.
அருகில் இருக்கக்கூடிய நாட்டு மருந்து கடைக்கு செல்லுங்கள். அங்கு நவதானிய பாக்கெட் விற்கும். நவகிரகங்களுக்கு உகந்த 9 தானியங்களும் கலந்த மாதிரி நவதானிய பாக்கெட் விற்கும். அதை வாங்கிக் கொள்ளுங்கள். வீட்டிற்கு வந்து மாலை நேரத்தில் விளக்கேற்றி வைத்து விட்டு ஒரு கிண்ணத்தில் இந்த நவதானியங்களை கொட்டி வைத்து விட வேண்டும்.
பிறகு “ஆதித்யாச சோமாய மங்களாய புதாயச குரு சுக்ர சனிப்யச்ச ராகவே கேதுவே நமோ நமஹ” என்னும் மந்திரத்தை கூற வேண்டும்.
தினமும் இந்த மந்திரத்தை கூறி அந்த நவதானியங்களை தொட்டு வணங்க வேண்டும். ஒரு வாரம் கழித்து எந்த நாளில் நாம் இந்த நவதானியங்களை வாங்கி வைத்தோமோ அதே நாளில் பழைய நவதானியங்களை எடுத்து விட்டு புதிதாக மறுபடியும் நவதானியத்தை கொண்டு வந்து வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
பழைய நவதானியத்தை சுண்டலாக வேக வைத்து வீட்டில் இருக்கும் அனைவருக்கும் தரலாம் அல்லது அதை மாவாக அரைத்து தோசை ஊற்றுவது போல் ஊற்றியும் சாப்பிடலாம். நவதானியங்களை சாப்பிட விருப்பமில்லை என்பவர்கள் இதை நன்றாக ஊற வைத்து அருகில் இருக்கும் பசு மாட்டிற்கு தானமாக வழங்கி விட வேண்டும்.
இப்படி நாம் ஒவ்வொரு வாரமும் தொடர்ச்சியாக செய்து வர நவகிரகங்களால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும் மேலும் நவகிரகங்களால் நமக்கு நன்மைகள் உண்டாகும். இதையும் படிக்கலாமே: நல்லது நடக்க செய்ய வேண்டிய பரிகாரம் எளிமையான இந்த பரிகாரத்தில் முழு நம்பிக்கை இருப்பவர்கள் நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்து நவகிரகங்களால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து விடுபடலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.