மீன ராசியினருக்கு நிழல் காரியங்களால் சங்கடங்கள் தோன்றும் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
3 months ago
மீன ராசியினருக்கு நிழல் காரியங்களால் சங்கடங்கள் தோன்றும் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: சாதகமான நாள். அலுவலகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த பணம் வரும். பரணி: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். பணியிடத்தில் நெருக்கடிகளுக்கு ஆளாவீர்கள்.கார்த்திகை 1: உங்கள் விருப்பம் நிறைவேறும் நாள். உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: நன்மைகளைக் காணும் நாள். சட்ட விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாகும். ரோகிணி: உங்கள் தேவைகள் பூர்த்தியாகும் நாள். வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும்.மிருகசீரிடம் 1,2: குழப்பத்திற்கு ஆளாகும் நாள். உங்கள் செயல்களில் தடை ஏற்படும். வருமானம் இழுபறியாகும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். வெளியூர் பயணத்தை தள்ளி வைப்பது நன்மையாகும்.திருவாதிரை: முயற்சியால் முன்னேறும் நாள். தடைகளைத் தாண்டி நினைத்ததில் வெற்றி காண்பீர்கள். புனர்பூசம் 1,2,3: வழிபாட்டால் ஏற்றம் காணும் நாள். அலைச்சல் அதிகரிக்கும். முயற்சி இழுபறியாகும்.

கடகம்

புனர்பூசம் 4: உங்கள் முயற்சிகள் மாலைவரை லாபமடையும். அதன்பின் எதிர்பாராத சில சங்கடங்களை சந்திப்பீர்கள்.பூசம்: நினைத்த செயல்களை நடத்தி முடிப்பீர்கள். அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.ஆயில்யம்: நீங்கள் நினைப்பதற்கு மாறாக அலுவலகத்தில் சில செயல்கள் நடந்தேறும்.

சிம்மம்

மகம்: ஆதாயமான நாள். தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். ஆரோக்கியம் சீராகும். பூரம்: சூழ்நிலைகளை அறிந்து செயல்பட வேண்டிய நாள். உங்கள் எதிர்பார்ப்பில் இன்று இழுபறி உண்டாகும்.உத்திரம் 1: விருப்பம் நிறைவேறும் நாள். வழக்கு விவகாரம் உங்களுக்கு சாதகமாகும்.

கன்னி

உத்திரம் 2,3,4: உங்கள் செல்வாக்கு உயரும் நாள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி ஆதாயமாகும். அஸ்தம்: குலதெய்வ அருளால் குறைகள் தீரும் நாள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நிதிநிலை உயரும்.சித்திரை 1,2: தடைகளைத் தாண்டி வெற்றியடையும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரிசெய்வீர்கள்.

துலாம்

சித்திரை 3,4: திட்டமிட்டு செயல்பட்டாலும் முடிவு இழுபறியாகும். பண நெருக்கடியால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள்.சுவாதி: நெருக்கடிகள் நீங்கும் நாள். உடல்நிலை சீராகும். வழக்கு விவகாரம் சாதகமாகும். விசாகம் 1,2,3: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். உதவி புரிவதாக சொன்னவர்கள் விலகிச் செல்வார்கள்.

விருச்சிகம்

விசாகம் 4: முயற்சிகளில் சில தடைகளை சந்திப்பீர்கள். புதிய செயல்களை ஒத்தி வைப்பது நல்லது. அனுஷம்: செயல்களில் இருந்த தடைகள் நீங்கும். எதிர்பார்த்த தகவல்வரும். போட்டியாளர்கள் விலகுவார்கள்.கேட்டை: நிறைவேறாத விருப்பங்களை நினைத்து வருந்துவீர்கள். மனதில் குழப்பம் அதிகரிக்கும்.

தனுசு

மூலம்: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்னைகள் சரியாகும். பூராடம்: மனதில் கடவுள் நம்பிக்கை அதிகரிக்கும். செயல்களில் கவனம் செலுத்துவது நன்மையாகும்.உத்திராடம் 1: வியாபாரத்தில் புதிய அணுகுமுறையைக் கையாளுவீர்கள். உங்கள் எண்ணம் நிறைவேறும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: மனதில் இருந்த குழப்பம் நீங்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட போட்டிகள் விலகும். திருவோணம்: நேற்றைய பிரச்னைகள் முடிவிற்கு வரும். திட்டமிட்டு செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.அவிட்டம் 1,2: செயல்களில் கவனம் அவசியம். வியாபாரத்தில் சில பிரச்னைகள் தோன்றும்.

கும்பம்

அவிட்டம் 3,4: முயற்சியில் தடைகளை சந்திப்பீர்கள். எதிர்பார்ப்பு இழுபறியாகும். குழப்பத்திற்கு ஆளாவீர்கள்.சதயம்: முயற்சியால் முன்னேறும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர்கள். வருமானம் உயரும்.பூரட்டாதி 1,2,3: உதவி புரிவதாக சொன்னவர்கள் விலகுவர். உங்களது பேச்சினால் பிரச்னைகளை சந்திப்பீர்கள்.

மீனம்

பூரட்டாதி 4: உங்கள் முயற்சி இழுபறியாகும். வரவை விட செலவு அதிகரிக்கும். கவனமாக செயல்பட வேண்டிய நாள்.உத்திரட்டாதி: நினைப்பது நிறைவேறும் நாள். பணிபுரியும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். ரேவதி: நட்புகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள். நிழல் காரியங்களால் சங்கடங்கள் தோன்றும்.