வாகன இறக்குதி தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்ட செய்தி!

#SriLanka #Bank #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
வாகன இறக்குதி தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்ட செய்தி!

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்த அரசாங்கம் தீர்மானித்தால், வெளிநாட்டு கையிருப்பை நிர்வகிக்கும் திறன் மத்திய வங்கிக்கு உண்டு என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். 

நேற்று (28) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர் மேற்படி அறிவித்துள்ளார். 

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் தெரிவிக்கையில், மத்திய வங்கி தனது கொள்கை வட்டி வீதத்தை மாற்றியமைக்கவில்லை.  

ஏற்கனவே சில வாகனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. வாகனங்களின் இறக்குமதியை படிப்படியாக எளிதாக்குவது முக்கியமான முடிவு. அன்னியச் செலாவணியை எங்களால் நிர்வகிக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்” எனத் தெரிவித்துள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4