விருச்சிக ராசியினர் சூழ்நிலை அறிந்து செயல்பட வேண்டிய நாள் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
3 months ago
விருச்சிக ராசியினர் சூழ்நிலை அறிந்து செயல்பட வேண்டிய நாள் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: உழைப்பால் முன்னேற வேண்டிய நாள். வியாபாரத்தில் இன்று கவனம் செலுத்துவது அவசியம்.பரணி: அல்லல்கள் தீரும் நாள். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.கார்த்திகை 1: கவனமாக செயல்பட வேண்டிய நாள். பணத்தேவை அதிகரிக்கும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: நம்பிக்கையுடன் மேற்கொண்ட வேலை இழுபறியாகும். மற்றவரை அனுசரித்துச் செல்லுங்கள். ரோகிணி: செயல்களில் லாபம் காணும் நாள். உங்கள் முயற்சிக்கு பணியாளர்கள் ஒத்துழைப்பார்கள்.மிருகசீரிடம் 1,2: முன்னேற்றமான நாள். போட்டிகளை சமாளித்து வியாபாரத்தில் வெற்றி காண்பீர்கள்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: அதிர்ஷ்டமான நாள். நீண்டநாள் எண்ணம் நிறைவேறும். நட்பு வட்டம் விரியும். திருவாதிரை: வழிபாட்டால் முன்னேற்றம் காண வேண்டிய நாள். மனதில் எதிர்பாராத குழப்பம் தோன்றும்.புனர்பூசம் 1,2,3: மகிழ்ச்சியான நாள். உங்கள் எண்ணம் நிறைவேறும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். 

கடகம்

புனர்பூசம் 4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். செயல்களில் லாபமும் முயற்சியில் முன்னேற்றமும் உண்டாகும்.பூசம்: விழிப்புடன் செயல்படவேண்டிய நாள். நினைத்த செயல்கள் நிறைவேறாமல் போகும். ஆயில்யம்: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். 

சிம்மம்

மகம்: குழப்பத்திற்கு ஆளாகும் நாள். நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும்.பூரம்: வருமானத்தால் வளம் காணும் நாள். உங்கள் முயற்சி நிறைவேறும். வரவேண்டிய பணம் வரும். உத்திரம் 1: குடும்பத்தினரை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். உங்கள் முயற்சியில் லாபம் காண்பீர்கள். 

கன்னி

உத்திரம் 2,3,4: எதிரிகள் கை ஓங்கும் நாள். பணியிடத்தில் உங்கள் வேலைகளில் மட்டும் கவனம் செலுத்தவும்.அஸ்தம்: வெற்றிகள் அதிகரிக்கும் நாள். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும். சித்திரை 1,2: விருப்பம் நிறைவேறும் நாள். தொழிலில் அக்கறை செலுத்துவீர்கள். வருமானம் உயரும். 

துலாம்

சித்திரை 3,4: செயலில் லாபம் காணும் நாள். குழந்தைகள் நலனில் அக்கறை கொள்வீர்கள். சுவாதி: நெருக்கடிகளுக்கு ஆளாகும் நாள். வழக்கமான செயல்களில் மட்டும் ஈடுபடவும். விசாகம் 1,2,3: நினைத்ததை சாதிக்கும் நாள். சாமர்த்தியமாக செயல்படுவீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும்.

விருச்சிகம்

விசாகம் 4: எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். தாய்வழி உறவினர்கள் ஆதரவுடன் முயற்சியில் வெற்றி அடைவீர்கள்.அனுஷம்: சூழ்நிலை அறிந்து செயல்பட வேண்டிய நாள். உடன் இருப்பவர்களை அனுசரித்துச் செல்லுங்கள். கேட்டை: வழக்கு விவகாரம் உங்களுக்கு சாதகமாகும். நிதிநிலை உயரும் நாள்.

தனுசு

மூலம்: உழைப்பு அதிகரிக்கும் நாள். அலுவலகத்தில் வேலைபளு அதிகரிக்கும். மனம் சோர்வடையும்.பூராடம்: விருப்பம் நிறைவேறும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். உத்திராடம் 1: தடைகளை சந்திக்கும் நாள். திட்டமிட்ட செயல்களும் இழுபறியாகும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: உங்கள் செயல்களில் தடையும் தாமதமும் ஏற்படும். பேச்சில் கவனம் தேவை. திருவோணம்: வருமானத்தால் வளம்காணும் நாள். தொழிலில் இருந்த தடைகள் விலகும். அவிட்டம் 1,2: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். 

கும்பம்

அவிட்டம் 3,4: நேற்றைய குழப்பம் விலகும். திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காண்பீர்கள். சதயம்: குடும்பத்தில் எதிர்பாராத பிரச்னைகள் தோன்றும். உங்கள் எண்ணத்திற்கு மாறாக சில செயல்கள் நடைபெறும்.பூரட்டாதி 1,2,3: பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். 

மீனம்

பூரட்டாதி 4: முயற்சியில் கவனம் செல்லும். நினைத்ததை சாதிப்பீர்கள். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள்.உத்திரட்டாதி: பணியிடத்தில் வேலைபளு அதிகரிக்கும். மறைமுக எதிரிகளால் மனதில் சங்கடம் உண்டாகும். ரேவதி: நினைப்பது நிறைவேறும் நாள். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும்.