கொழும்பில் கால்வாயில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு - பொலிஸார் தீவிர விசாரணை!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
கொழும்பில் கால்வாயில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு - பொலிஸார் தீவிர விசாரணை!

கொழும்பு பகுதியில் உள்ள குப்பை கால்வாயில் இருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் நேற்று (29.05) தெரிவித்துள்ளனர். 

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டேஸ்புர பகுதியில் பெண் ஒருவரின் சடலம் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த அழைப்பின் பேரில், இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

அவரது அடையாளம் இதுவரை வெளியிடப்படவில்லை என்பதுடன் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

உயிரிழந்தவர் 45 மற்றும் 50 வயதுக்கு இடைப்பட்ட 4 அடி 09 அங்குல உயரம் கொண்ட பெண் ஆவார். மஞ்சள் பூக்கள் கொண்ட சிவப்பு நிற ஆடையை அணிந்துள்ளார். 

  சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4