ரணில் ஒருபோதும் சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்ல மாட்டார்: அனுர
#SriLanka
#Sri Lanka President
#Ranil wickremesinghe
Mayoorikka
2 years ago
ஜனாதிபதித் தேர்தலை வெல்ல முடியாத ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஒருபோதும் ஒருபோதும் சர்வஜன வாக்கெடுப்பொன்றுக்கு செல்ல மாட்டாரென தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க புதன்கிழமை (29) தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் சர்வஜன வாக்கெடுப்பில் வெல்ல முடியுமானால் நிச்சயமாக அவரால் ஜனாதிபதித் தேர்தலுக்குச் செல்ல முடியுமென பாராளுமன்ற உறுப்பினரான அநுர குமார திஸாநாயக்க கூறியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், பசில் ராஜபக்ஷவும் தேர்தலுக்கான எத்திட்டங்களையோ அல்லது நோக்குகளையோ கொண்டிராத நிலையில் அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்த முயல்வதாக அநுர குமார திஸாநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே