இலங்கையில் இருந்து பாகிஸ்தானுக்கு 36 000 கருவிழிப்படலங்கள் நன்கொடை!

#SriLanka #Pakistan
Mayoorikka
2 years ago
இலங்கையில் இருந்து பாகிஸ்தானுக்கு 36 000 கருவிழிப்படலங்கள் நன்கொடை!

இலங்கை பாகிஸ்தானுக்கு 36,000 கருவிழிப்படலங்களை (corneas) நன்கொடையாக வழங்கியுள்ளதாக பாகிஸ்தானுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஓய்வுப்பெற்ற எட்மிரல் வீந்திர விஜேகுணவர்தன தெரிவித்துள்ளார். இலங்கை உலகிற்கு 88,000 கருவிழிப்படலங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. 

அதில் பாகிஸ்தானுக்கே அதிகளவு வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். இராண்டாவது இடத்திலுள்ள நாட்டிற்கு 2,000 கருவிழிப்படலங்கள் வழங்கப்பட்டுள்ளது.

 எதிர்காலத்தில், இலங்கை இராணுவத்தினரின் கருவிழிப்படலங்கள் நல்லெண்ணத்தின் அடிப்படையில் பாகிஸ்தானுக்கு வழங்கப்படவுள்ளதாக உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.

 சுற்றுச்சூழலிலிருந்து ஒட்சிசனை எடுத்துக் கொள்ளும் `கார்னியா’ எனப்படும் கருவிழிப்படலம், இரத்தமில்லாத திசுவால் ஆனது. இதனை, தானமாக கொடுப்பவருக்கோ, அதனைப் பெற்றுக் கொள்பவருக்கோ, மருத்துவ ரீதியாக எந்தவொரு பொருத்தமும் வேண்டியதில்லை. அவை இயல்பாகவே எவருக்கும் ஏற்புடையதாகிவிடும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4