பாதுக்க நகரில் புகுந்த வெள்ளம் : சாரதிகளின் கவனத்திற்கு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
தற்போதைய மழை நிலைமை காரணமாக பாதுக்க நகரின் ஊடாக பாயும் புசாலி ஓயா பெருக்கெடுத்து ஓடுவதால் பாதுக்க நகருக்கு செல்லும் இரண்டு வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.பாதுக்க ஹன்வெல்ல வீதியும் பாதுக்க இங்கிரிய வீதியும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதன் காரணமாக பாதுக்க நகரில் உள்ள பல தாழ்வான வீடுகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே