மீன ராசியினருக்கு மனதில் தேவையற்ற குழப்பம் மேலோங்கும் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
3 months ago
மீன ராசியினருக்கு மனதில் தேவையற்ற குழப்பம் மேலோங்கும் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ளும் நாள். உங்கள் முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.பரணி: நீங்கள் மேற்கொள்ளும் வேலைகளில் இழுபறி உண்டானாலும் அதைப் போராடி முடிப்பீர். கார்த்திகை 1: குடும்பத்தில் திடீர் என மகிழ்ச்சி அதிகரிக்கும். நடக்காது என நினைத்த வேலை இன்று நடக்கும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: முயற்சி வெற்றியாகும் நாள். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். எதிர்பார்த்த வரவு வரும்.ரோகிணி: கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். நிறைவேறும் என்று நினைத்த வேலை இன்று இழுபறியாகும். மிருகசீரிடம் 1,2: எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். போட்டியாளர்களால் உண்டான நெருக்கடியை சமாளிப்பீர்கள்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: தொழிலில் புதிய உத்திகளைக் கையாள்வீர். கோயில் வழிபாடு நிம்மதி தரும். திருவாதிரை: தெளிவாக செயல்பட வேண்டிய நாள். தொழிலை விரிவு செய்வது பற்றி யோசிப்பீர்கள்.புனர்பூசம் 1,2,3: நன்மையான நாள். வியாபாரத்தில் உங்கள் விருப்பம் நிறைவேறும். லாபம் அதிகரிக்கும்.

கடகம்:

புனர்பூசம் 4: தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் அடைவீர். பணியாளர் ஆதரவு அதிகரிக்கும்.பூசம்: முயற்சியில் வெற்றிபெற திட்டமிட்டு செயல்படுவீர். உங்கள் திறமை வெளிப்படும். வருமானம் உயரும்.ஆயில்யம்: திட்டமிட்டு செயல்படாமல் இருப்பதால் தேவையற்ற குழப்பம் தோன்றும். செயல்களில் தடுமாற்றம் ஏற்படும்.

சிம்மம்

மகம்: இறையருளால் விருப்பம் நிறைவேறும் நாள். இன்று உங்கள் செயலை நிறைவேற்றி லாபம் காண்பீர். பூரம்: மனதில் ஒருவித பயம் வரும். எதிர்பார்த்தவற்றில் தடை உண்டாகும். பயணத்தில் எச்சரிக்கை தேவை.உத்திரம் 1: விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நாள். தேவையற்ற பிரச்னை தோன்றும். அமைதி காப்பது அவசியம்.

கன்னி

உத்திரம் 2,3,4: முயற்சியால் லாபம் காணுவீர்கள். நண்பர் ஒத்துழைப்புடன் வேலையை நடத்தி லாபம் அடைவீர்கள்.அஸ்தம்: அனுசரித்துச் சென்று வியாபாரத்தில் லாபம் காண வேண்டிய நாள். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்ட பிரச்னை விலகும்.சித்திரை 1,2: கோயில் வழிபாட்டால் அமைதி காணும் நாள். இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும்.

துலாம்

சித்திரை 3,4: உங்கள் முயற்சியில் வெற்றி பெறுவீர். போட்டியாளர்கள் விலகிச் செல்வர். வருமானம் அதிகரிக்கும். சுவாதி: அலட்சியம் வேண்டாம். உங்கள் கவனக்குறைவால் சில சங்கடம் தோன்றும். விசாகம் 1,2,3: உங்கள் திறமை வெளிப்படும் நாள். சாமர்த்தியமாக செயல்பட்டு நினைத்ததை சாதித்துக் கொள்வீர்.

விருச்சிகம்

விசாகம் 4: செயல்களால் செழிப்பு அடையும் நாள். திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். அனுஷம்: உங்கள் முயற்சி வெற்றியாகும் நாள். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும்.கேட்டை: சங்கடங்களை சந்திக்கும் நாள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி இழுபறியாகும். மனம் குழப்பம் அடையும்.

தனுசு

மூலம்: மனதில் இருந்த சங்கடம் நீங்கும். வழக்கமான செயல்களில் லாபம் உண்டாகும். நன்மையான நாள்.பூராடம்: குடும்பத்தில் குழப்பம் தோன்றும். உங்கள் கவனக்குறைவால் சில சங்கடம் உண்டாகும்.உத்திராடம் 1: எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். நீங்கள் கேட்ட இடத்தில் இருந்து கேட்டது கிடைக்கும். வருமானம் திருப்தி தரும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: இழுபறியாக இருந்த உங்கள் முயற்சி நிறைவேறும். தன்னம்பிக்கை உண்டாகும். நினைத்ததை அடைவீர்.திருவோணம்: உங்கள் செயலில் சில தடை தோன்றும். எதிர்பார்ப்பு நிறைவேறாமல் தள்ளிப்போகும்.அவிட்டம் 1,2: குருவருளால் குறை தீரும் நாள். நீங்கள் எதிர்பார்த்த லாபத்தை இன்று அடைவீர்கள். உங்கள் எண்ணம் நிறைவேறும்.

கும்பம்

அவிட்டம் 3,4: உங்கள் விருப்பம் நிறைவேறும் நாள். கடனாக கொடுத்திருந்த பணம் திரும்ப வரும். சதயம்: குழப்பத்திற்கு ஆளாகும் நாள். உங்கள் செயல்களே இன்று உங்களுக்கு எதிராகும். குடும்பத்தினர் கோபத்திற்கு ஆளாவீர். பூரட்டாதி 1,2,3: உங்கள் முயற்சி வெற்றியாகும் நாள். திட்டமிட்டு செயல்பட்டு தேவையை நிறைவேற்றிக் கொள்வீர்.

மீனம்

பூரட்டாதி 4: செயல்களால் லாபம் காணும் நாள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வரவேண்டிய பணம் கைக்கு வரும்.உத்திரட்டாதி: குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். உங்கள் எண்ணம் நிறைவேறும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.ரேவதி: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். மனதில் தேவையற்ற குழப்பம் மேலோங்கும். செயல்களில் கவனம் தேவை.