வாய்தர்க்கத்தால் ஏற்பட்ட விபரீதம் : நபர் ஒருவர் படுகொலை!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
பழைய தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் நேற்று (04.06) படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹென்யாய பிரதேசத்தில் இக்கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹென்யாய, செம்புகட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 57 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 36 வயதுடைய சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மாதம்பே பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே