சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற அவை நடவடிக்கைகள் ஆரம்பம்!
#sri lanka tamil news
Thamilini
2 years ago
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.
பெண்கள் வலுவூட்டல் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று (04.06) நடைபெறவுள்ளதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கை மின்சார சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு விவாதம் ஜூன் 06ஆம் திகதியும், பொதுக்கடன் முகாமைத்துவ சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு விவாதம் ஜூன் 07ஆம் திகதியும் நடைபெறவுள்ளது.
மிக முக்கியமான சில சட்டமூலங்கள் இந்த வாரத்தில் நிறைவேற்றப்படவுள்ள நிலையில் இதற்கு ஆளும் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவளிக்க வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த புதிய சட்டமூலங்களின் ஊடாக நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை உருவாக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே