நேருவிற்கு பின் மூன்றாவது முறையாகவும் பிரதமர் ஆகின்றார் மோடி!
மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். வாக்களர்கள் தனது கட்சி மீது வைத்திருந்த நம்பிக்கைக்கும் மோடி நன்றி தெரிவித்தார்.
அதேவேளை உத்தர பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் மூன்றாவது முறையாக பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட மோடி 1.52 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். முதல் சுற்று முடிவு முதல் 4 சுற்று முடிவில் பின்னடைவை சந்தித்திருந்தார் மோடி. இதனால் ஆதரவாளர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
ஆனால், அடுத்தடுத்த சுற்றுகளில் தொடர்ந்து அதிக வாக்குகளை பெற்ற மோடி 6,11,439 வாக்குகள் வித்தியாசத்தில் மோடியின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டது. மோடியை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராயை விட 1.52 லட்சம் வாக்குகள் இது அதிகமாகும்.
2014 ஆம் ஆண்டு தேர்தலில் வாரணாசி தொகுதியில் 6 லட்சத்து 76 ஆயிரம் வாக்குகளைப் பெற்ற மோடி, இம்முறை 1.52 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மாத்திரம் வெற்றிப்பெற்றிருக்கிறார் ஆகவே மோடிக்கு இது வெற்றியாக இருந்தாலும் கடந்த முறையை விட இது பின்னடைவாகும். பெரும்பான்மைப் பலத்துடன் ஆட்சியமைக்க 272 ஆசனங்கள் தேவை. 2019 இல், பாஜக 303 கைப்பற்றியிருந்தது.
2014 இல் 282 ஆசனங்களைப் பெற்று மோடியின் பாஜக முதன் முதலில் ஆட்சிக்கு வந்தது. அதேவேளை, தேர்தலில் வெற்றி என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தாலும், எதிர் கட்சிகளிடமிருந்து எதிர்பார்த்ததை விட வலுவான சவாலை எதிர் கொண்டிருக்கிறார்.
ஜவஹர்லால் நேருவுக்குப் பின்னர் மோடி ஆட்சி அமைத்தால் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவுக்குப் பின்னர், இந்தியத் தலைவர் ஒருவர் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கின்றமை இது இரண்டாவது முறையாகக் கருதப்படும். மோடியின் பாஜக தேசிய ஜனநாயக கூட்டணி 401 தொகுதிகளைக் கைப்பற்றும் என்றும் இந்தியா கூட்டணி 150 இடங்களை மாத்திரமே பெற்றுக்கொள்ளும் என்றும் ஆரம்பத்தில் கருத்துக் கணிப்புகள் வெளியாகியிருந்தன.
ஆனால் தற்போதைய நிலவரத்தின் பிரகாரம் மோடியை மையப்படுத்திய தேசிய ஜனநாயக கூட்டணி 290 தொகுதிகளையும் காங்கிரஸ் 230 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளன. இன்னும் சில தொகுதிகளின் முடிவுகள் வெளிவரவுள்ளன.
ஆகவே தற்போதை முடிவுகளின் படி பெரும்பான்மை இல்லாமல் கூட்டணி ஆட்சி அமையும் என்றே நம்பப்படுகின்றது.
இன்று நள்ளிரவு வரை கூட்டணி ஆட்சி அமைப்பது பற்றிய பேச்சுக்களில் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளின் மூத்த உறுப்பினர்கள் ஏட்டிக்குப் போட்டியாக ஈடுபட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன