அமித் ஷா நிர்மலாவுக்கு மீண்டும் அமைச்சுக்கள்
#India
#Minister
Mayoorikka
10 months ago

நரேந்தி மோடி நேற்று மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். அவரது தலைமையிலான மத்திய அமைச்சரவையில் பா.ஜ.க. மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இதில் ஏற்கெனவே பிரதமர் மோடியின் அமைச்சரவையில் அங்கம் வகித்த ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், எஸ்.ஜெய்சங்கர், பியூஷ் கோயல், அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் மீண்டும் மத்திய அமைச்சர்களாக பங்கேற்றுள்ளனர்.
பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் கடந்த 2019 இல் நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் பணியாற்றினார். கர்நாடக மாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர். செப்டம்பர் 2017 முதல் மே 2019 வரையில் மோடியின் முதல் ஆட்சியில் பாதுகாப்பு துறை அமைச்சராக பணியாற்றினார்.



