வாகன இறக்குமதி தொடர்பில் அமைச்சரவையின் தீர்மானம்!

#SriLanka #Import #vehicle
Mayoorikka
2 years ago
வாகன இறக்குமதி தொடர்பில் அமைச்சரவையின் தீர்மானம்!

சுற்றுலா துறைக்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான விதிமுறைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

 2023 ஆம் ஆண்டின் இரண்டாவது இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு ஒழுங்குமுறையின்படி, இலங்கைக்கான மோட்டார் வாகனங்களை இறக்குமதி செய்வது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

 ஆனால் சுற்றுலா மற்றும் காணி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனையின் பிரகாரம், 250 சிறிய பேருந்துகள் மற்றும் 75 வேன்களை சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.

 விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்ட ஒழுங்குமுறைகளை பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிப்பதற்கு நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாடு) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 2024 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) ஒழுங்குமுறைகள் மற்றும் மேற்படி சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட தரப்படுத்தல் மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஒழுங்குமுறைகள் பாராளுமன்ற ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4