ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த முயற்சி : AI தொழில்நுட்பத்தை உட்புகுத்த நடவடிக்கை!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
5 months ago
ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த முயற்சி  : AI தொழில்நுட்பத்தை உட்புகுத்த நடவடிக்கை!

அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம், AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தனது அடுத்த தயாரிப்பு வரிசையை அறிமுகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.  

அதன்படி, நேற்று நடைபெற்ற வருடாந்திர டெவலப்பர்கள் மாநாட்டில், ஆப்பிளின் அடுத்த ஐபோன் தயாரிப்பில் AI அல்லது செயற்கை நுண்ணறிவு பொருத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.  

குறிப்பாக, Open AI இன் பிரபலமான Chat GPT செயற்கை நுண்ணறிவு பயன்பாடு ஐபோன்களில் சேர்க்கப்படும் என்று ஆப்பிள் அறிவித்தது.  

அதேபோல், குரல் மூலம் செயற்படுத்தக்கூடிய "Siri" செயலி ஊடாக ஆப்பிள் ஃபோன்களின் குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள் மற்றும் மூன்றாம் தரப்பு செயலிகளுக்கு பதிலளிக்க முடியும் என ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் தெரிவித்துள்ளார்.  

உங்களுக்காக மின்னஞ்சல்களை எழுதவும் மற்றும் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப குரல் செய்திகளை அனுப்பவும் "Siri" AI செயலி தேர்ச்சி பெற்றுள்ளது.  

ஆப்பிள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஐபோன்களில் பிரபலமான Chat GPT AI பயன்பாட்டைக் கொண்டுவரும். ஆப்பிள் இந்த வழியில் AI தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தும்போது, ​​​​ஐபோன் விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

குறிப்பாக ஐபோன் பாவனையாளர்கள் தமது கைப்பேசிகளை AI தொழில்நுட்பத்துடன் அப்டேட் செய்ய விரும்புபவர்கள் இவ்வாறு புதிய ஐபோன் மொடல்களை வாங்குவதற்கு ஆசைப்படுவார்கள் என சந்தை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!