தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து : சாரதிகளுக்கு எச்சரிக்கை!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து : சாரதிகளுக்கு எச்சரிக்கை!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 61வது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் இன்று (13) அதிகாலை விபத்து ஏற்பட்டுள்ளது.  

மத்தள பகுதியில் இருந்து கொட்டாவ நோக்கி பயணித்த எரிபொருள் பவுசர் ஒன்று வீதியின் நடுவில் இருந்த பாதுகாப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளானது.  

விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்து காரணமாக, கொழும்பு நோக்கிச் செல்லும் ஒரு பாதை தடைப்பட்டுள்ளதுடன், கொழும்பு நோக்கிச் செல்லும் வாகனங்கள் மற்றைய பாதையை பயன்படுத்த முடியும். 

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் குருந்துகஹாஹட் அருகே பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4