இராமேஸ்வரம் பகுதியில் கடலுக்கு சென்ற இரு மீனவர்கள் பலி!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 month ago
இராமேஸ்வரம் பகுதியில் கடலுக்கு சென்ற இரு மீனவர்கள் பலி!

தமிழகத்தின் - ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் மேற்கு வாடி மீன் பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்ற இருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .

சுதர்சன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ஐந்து மீனவர்கள் பயணித்த நிலையில், படகின் இன்ஜின் செயலிழந்துள்ளது. இதன்காரணமாக படகு சேதமடைந்துள்ளது. 

இதனைத் தொடர்ந்து இரு நபர்கள் அருகில் இருந்து படகுமூலம் மீட்கப்பட்டு கரைசேர்ந்துள்ளனர். 

 இந்த நிலையில் ஆரோக்கியம், பரகத்துல்லா என்ற இரண்டு மீனவர்கள் மட்டும் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 

இதனை அடுத்து இந்திய கடலோர காவல் படை, கடலோர காவல் குழுமம் போலீசார் உயிரிழந்த இரண்டு மீனவர்களின் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.  

மேலும் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற முதல் நாளே இரண்டு மீனவர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சக மீனவர்கள் மற்றும் உயிரிழந்த மீனவரின் குடும்பத்தினரை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.