கையடக்க தொலைபேசிகளின் விலை உண்மையில் குறைந்துள்ளதா?

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
கையடக்க தொலைபேசிகளின் விலை உண்மையில் குறைந்துள்ளதா?

உயர்த்தப்பட்ட விலைகளுடன் ஒப்பிடுகையில் கையடக்கத் தொலைபேசிகளின் விலைகள் குறைக்கப்படவில்லை என அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

மேலும் கருத்து தெரிவித்த அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்  இந்திரஜித் பெரேரா, “மொபைல் போன்களின் விலை உயர்வை எடுத்துக்கொண்டால் 300% முதல் 400% வரை அதிகரித்தது.

சிறிய கைப்பேசியில் இருந்து நல்ல ஸ்மார்ட் போன் வரை இந்த அதிகரிப்பு ஏற்பட்டது. ஆனால் தற்போது குறைந்துள்ளது என்கிறார்கள். ஆமாம் குறைந்துள்ளது. ஆனால் பிரச்சனை என்னவென்றால் 30% அல்லது 30% குறைந்தால் வாடிக்கையாளர் எப்படி உணர்வார்கள்” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4