களுத்துறை பகுதியில் வெள்ளை வேனில் இளைஞரை கடத்திய மர்ம கும்பல்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
களுத்துறை பகுதியில் வெள்ளை வேனில் இளைஞரை கடத்திய மர்ம கும்பல்!

வெள்ளை வேனில் வந்த கறுப்பு ஆடை அணிந்த சிலர் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்றதாக கிடைத்த முறைப்பாட்டின் பேரில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர். 

களுத்துறை, ஹென்டியங்கல பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

கடத்தப்பட்ட இளைஞனின் தாயார் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

சந்தேகநபர்கள் வெள்ளை வேனில் வந்து ஹென்டியங்கல தேவாலயத்திற்கு அருகில் இளைஞனை தாக்கி கடத்திச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்கள் பிரதேசத்தை விட்டு வெளியேறியுள்ளதாகவும், அவர்களை உடனடியாக கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் களுத்துறையில் உள்ள சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4