ஒரு வழியாக இரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன அஜித்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
4 months ago
ஒரு வழியாக இரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன அஜித்!

அஜித் துணிவு படத்திற்கு பிறகு மகிழ் திருமேனியின் இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார். 

ஆனால் அதற்குள் பல விஷயங்கள் நடந்து பல மாற்றங்கள் நிகழ்ந்தது. அஜித்தின் 62 ஆவது திரைப்படம் விக்னேஷ் சிவனிடமிருந்து மகிழ் திருமேனிக்கு கைமாறியது. இதன் அறிவிப்பு கடந்தாண்டு அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது.

 அதன் பிறகு விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு பல இழுபறிக்கு பிறகு ஒருவழியாக அக்டோபர் மாதம் துவங்கியது. அஜித், அர்ஜுன், த்ரிஷா, ஆரவ் என பலர் நடிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வந்தது. 

கிட்டத்தட்ட 70 % படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வந்த நிலையில் திடீரென படக்குழு கிளம்பி சென்னைக்கு வந்தடைந்தது. ஏன் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது என்ற காரணம் தெரியாமல் ரசிகர்கள் குழம்பி தவித்தனர்.  

இதற்கிடையில் அஜித் தன் அடுத்த படத்தை அறிவித்தார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடிக்க துவங்கினார். அப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. 

ஆனால் விடாமுயற்சி படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்பதே தெரியாமல் உள்ளது.  

பலரும் பல கருத்துக்களை கூறி வர இடையில் இப்படம் கைவிடப்பட இருப்பதாகவும் கூட வதந்திகள் பரவி வருகின்றன. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு விடாமுயற்சி படத்தில் அஜித்திற்கு சம்பள பிரச்சனை இருப்பதாகவும், அதனை சரிசெய்து விட்டால் படப்பிடிப்பு அடுத்த வாரம் துவங்கும் என்றும் சொல்லப்பட்டது.  

இருப்பினும் தற்போதைய அறிவிப்பு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது  ஜூன் 20 ஆம் திகதி விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள அஜித் முடிவெடுத்துள்ளார். ஆனால் ஜூலை 1 மற்றும் 2 ஆம் திகதி அஜித் தன் சொந்த விஷயம் காரணமாக சென்னைக்கு திரும்ப இருக்கிறாராம். 

எனவே அந்த இரண்டு நாட்கள் சென்னைக்கு போய்விட்டு மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!