அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனை விலை அதிகரிப்பு

#SriLanka #prices #America #Dollar
Prasu
2 years ago
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனை விலை அதிகரிப்பு

இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று புதன்கிழமை (19) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகித அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி, 300 ரூபாய் 21 சதமாக பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 299 ரூபாய் 30 சதமாகக் காணப்பட்டது.

அத்துடன், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 309 ரூபாய் 63 சதமாக பதிவாகியுள்ளது.

 நேற்றைய தினம், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 308 ரூபாய் 65 சதமாகக் காணப்பட்டது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4