இலங்கையில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
இலங்கை - கடுவெல ரணல பிரதேசத்தில் தனியார் பேருந்தும் மாணவர் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் இன்று (19) விபத்து இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் இருந்து லம்புகமுவ நோக்கி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தும், அம்பிலிபிட்டியவில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் 20 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே