நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 75 மி.மீற்றர் மழைவீழ்ச்சிக்கு வாய்ப்பு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீற்றருக்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் காற்றானது 40-50 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என திணைக்களத்தின் அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே