தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் - பொலிஸ் அதிகாரி எச்சரிக்கை!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் - பொலிஸ் அதிகாரி எச்சரிக்கை!

தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.  

தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு சட்டரீதியான உரிமை கிடையாது என அதன் ஊடகப் பேச்சாளர், சிறைச்சாலை ஆணையாளர்  காமினி பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை, அண்மையில் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்ட சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் சிறைச்சாலைகள் ஆணையாளர் கருத்து வெளியிட்டார். 

மிகச் சிறிய அதிகாரிகள் குழுவொன்று மற்றவர்களை மிரட்டியதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார். மூத்த அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4