கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய விவகாரம்: 42 பேர் உயிரிழப்பு

#India #Death #Tamil Nadu
Mayoorikka
3 months ago
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய விவகாரம்: 42  பேர் உயிரிழப்பு

தமிழ்நாடு கள்ளக்குறிச்சியில் கருணாபுரம் பகுதியில் 42 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் இடமாற்றம் செய்யப்பட்டார் .

மாவட்ட எஸ்.பி., சஸ்பெண்ட் செய்யப்ப்டடார். இவ்வழக்கு சிபிசிஐடி வசம் தமிழக அரசு ஒப்படைத்து உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் (ஜூன் 19) ஒரே நாளில் அடுத்தடுத்து கள்ளக்குறிச்சியை சே்ர்ந்த பிரவீன், சுரேஷ், சேகர், மற்றொரு சுரேஷ், கந்தன், ஜெகதீசன், ஆறுமுகம், தனிக்கொடி ,வீர சோழபுரம் கிராமத்தை சேர்ந்த டேவிட் உள்ளிட்டோர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 16ஆக அதிகரித்து உள்ளது. 

கள்ளச்சாராயம் அருந்தியவர்களில் 65 பேர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையிலும புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 16 பேருக்கும், சேலம், விழுப்புரம் மருத்துவமனைகளில் 13 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி மாநிலம் ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டு இருந்த 15 பேரில் புதுச்சேரியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, மணி, மற்றும் இந்திரா என்ற பெண் என மூன்று பேர் பலியாகினர். 

மேலும் முண்டியம்பாக்கத்தை சேரந்த மணிகண்டன் என்பவர் பலியாகி உள்ளார். மீதமுள்ளவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

 ஒரே நாளில்16பேர் உயிரிழந்ததால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், கள்ளச்சாராயம் குடித்து தான் உயிரிழந்திருப்பதாக சந்தேகிக்கின்றனர். இது குறித்து போலீசாருடன் இணைந்து வருவாய்த்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கண்ணுக்குட்டி என்ற சாராய வியாபாரி உட்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!