பேருந்து ஒன்றுடன் மோதிய முச்சக்கரவண்டி : இருவர் உயிரிழப்பு!

#SriLanka #Accident #sri lanka tamil news
Thamilini
2 years ago
பேருந்து ஒன்றுடன் மோதிய முச்சக்கரவண்டி : இருவர் உயிரிழப்பு!

பஸ் ஒன்றும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அனுராதபுரம் - பாதெனிய வீதியில் தலாவ எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இன்று (23) காலை இந்த பயங்கர விபத்து இடம்பெற்றுள்ளது.

19 மற்றும் 24 வயதுடைய இரு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர். விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டியில் நான்கு பேர் பயணித்தமை குறிப்பிடத்தக்கது.

உல்லாசப் பயணத்திற்காக இரத்தினபுரியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பஸ்ஸுடன் முச்சக்கரவண்டி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் இருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும், தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4