நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நடிகை த்ரிஷா

தமிழக வெற்றிக் கழக தலைவருவம், நடிகருமான விஜயின் 50-வது பிறந்தநாளை நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
சினிமாவை பொறுத்தவரை நடிகர்கள் எத்தனை வருடங்கள் கடந்தாலும் அவர்கள் ஹீரோவாகத் தான் நடிப்பார்கள்.
ஆனால் இதற்கு இணையாக தற்போது வரை த்ரிஷா ஹீரோயின் ஆகவே நடித்து வருகிறார்.
அதிலும் விஜய்யுடன் இணைந்து கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி போன்ற படங்களில் நடித்திருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த வருடம் வெளியா லியோ படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.
நீண்ட நாட்களுக்கு பிறகு இருவரும் இணைந்த லியோ படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படம் மூலம் இவரோட கெமிஸ்ட்ரி 20 வருடங்களாகவே ஒர்க் அவுட் ஆகிறது என்றே சொல்லலாம்.
இந்நிலையில் த்ரிஷா எக்ஸ் தளப்பதிவில் நடிகர் விஜய்க்கு வாழ்த்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில்,
" அமைதியில் இருந்து புயலாகவும், புயலுக்கு பின் அமைதியாகவும்.. இதைத் தொடர்ந்து பல மைல்கற்களை அடைய வாழ்த்துகிறேன்" என்று கூறியுள்ளார். த்ரிஷா விஜய்யுடன் ஃலிப்ட் ஒன்றில் பயணிக்கும் போது எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படத்தை போஸ்ட் செய்துள்ளார்.




The calm to a storm,The storm to a calm!
— Trish (@trishtrashers) June 23, 2024
To many more milestones ahead🎂🎈
♥️♾️🧿 pic.twitter.com/k4ZK75v7PZ