வவுனியாவில் இன்று தமிழ்பொது வேட்பாளர் குறித்து முக்கிய தீர்மானம்!
#SriLanka
#Vavuniya
Mayoorikka
10 months ago

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் நிறைவேற்றுக் குழு இன்று(24) வவுனியாவில் ஒன்றுகூடவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் சிறீகாந்தா மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் பிரதிநிதிகள் உள்ளிட்ட நிறைவேற்றுக் குழுவின் ஏனைய அங்கத்தவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இந்தக் கூட்டத்தின் போது ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் ஜனநாயக தேசியக் கூட்டணியாக இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



