கடலில் அடித்துச் செல்லப்பட்ட வெளிநாட்டு பிரஜை!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
கடலில் அடித்துச் செல்லப்பட்ட வெளிநாட்டு பிரஜை!

உனவடுன கடற்கரையில் நீராடச் சென்ற வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இந்த வெளிநாட்டவர் நேற்று (25.06) மாலை நீராடச் சென்ற வேளையில் நீரோட்டத்தில் சிக்கியுள்ளதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்தனர்.  

பிரதேசவாசிகளின் தலையீட்டினால் கடற்கரையில் இருந்து மீட்கப்பட்டு காலி, கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 61 வயதான மலேசியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இதேவேளை, வெலிகந்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அசேலபுர பிரதேசத்தில் உள்ள டி கால்வாயில் குளிப்பதற்குச் சென்ற பெண் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.  

குறித்த பெண் நேற்று (25) இரவு நீராடச் சென்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். அசேலபுர, வெலிகந்த பிரதேசத்தில் வசிக்கும் 56 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4