கென்யா நைரோபி விவகாரம்: இலங்கையர்கள் தொடர்பில் வெளியான தகவல்

#SriLanka #Kenya
Mayoorikka
2 years ago
கென்யா நைரோபி விவகாரம்: இலங்கையர்கள் தொடர்பில் வெளியான தகவல்

கென்யாவில் வசிக்கும் அனைத்து இலங்கையர்களும் பாதுகாப்பாக உள்ளதுடன் நைரோபியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

 ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் நேற்று (26) கென்யாவின் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து வரி விதிப்புகளுக்கு தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

 இதன்போது கட்டிடத்தின் ஒரு பகுதியை அவர்க எரியூட்டியதாகவும், இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் தப்பியோடியதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

images/content-image/2024/06/1719382997.jpg

 இதன்போது குறைந்தது 5 பேர் கொல்லப்பட்டனர். 45க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதுடன் பெருமளவானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 இந்தநிலையில், கென்யாவில் உள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்பதையும், எந்த ஒரு ஆபத்தான சூழ்நிலையும் இல்லை என்றும் இலங்கை உயர்ஸ்தானிகர் கனகநாதன் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4