18 கோடி ரூபாய் பெறுமதியான தங்க ஜெல்லை கடத்திய அறுவர் கைது!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
18 கோடி ரூபாய் பெறுமதியான தங்க ஜெல்லை கடத்திய அறுவர் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சுமார் 18 கோடி ரூபா பெறுமதியான தங்க ஜெல் மற்றும் பந்துகளுடன் வந்த இலங்கையர்கள் 06 பேரை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். 

கல்முனை, மூதூர், கொழும்பு-10, கலகெடிஹேன மற்றும் மினுவாங்கொடை ஆகிய பகுதிகளில் வசிக்கும் 30 முதல் 50 வயதுக்குட்பட்ட சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவர்கள் அடிக்கடி விமானங்களில் பயணம் செய்பவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவர்கள் துபாயில் இருந்து இந்தியாவின் சென்னைக்கு வந்து அங்கிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

விமான நிலைய சுங்க அதிகாரிகள் ஸ்கேன் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததை அடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4