கொழும்பின் பல பகுதிகளில் நீர் வெட்டு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
கொழும்பின் பல பகுதிகளில்  நீர் வெட்டு!

கொழும்பு உள்ளிட்ட பல பிரதேசங்களுக்கு இன்று (29.06) நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. 

அதன்படி இன்று காலை 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 15 மணி நேரம் நீர் விநியோகம் தடைப்படும். 

கொழும்பு, தெஹிவளை, கோட்டே, கடுவலை, மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ, ஆகிய மாநகர சபைப் பகுதிகளுக்கும், கொட்டிகத்த, உள்ளுராட்சி மன்றப் பகுதிகளுக்கும் நீர்விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

மேலும், மொரட்டுவ மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் குறைந்த அழுத்தத்தின் கீழ் நீர் விநியோகம் செய்யப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.  

அம்பத்தளையில் உள்ள நீர் சுத்திகரிப்பு அமைப்பின் அத்தியாவசிய புனரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த நீர் வெட்டு ஏற்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4