அரபிக் கடல் கொந்தளிப்பாக காணப்படும் : மக்களுக்கு எச்சரிக்கை!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அரபிக்கடற்பரப்பு மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
06 மற்றும் 20 வடக்கு அட்சரேகை மற்றும் 55 மற்றும் 70 கிழக்கு தீர்க்கரேகைக்கு இடைப்பட்ட பகுதியில் மணிக்கு 70-80 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக குறித்த பிரதேசத்தில் மீன்பிடி மற்றும் கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் பணியாளர்கள் உடனடியாக நிலத்திற்கு அல்லது பாதுகாப்பான இடத்திற்கு வருமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
மறு அறிவித்தல் வரை அந்த கடற்பரப்பில் கடற்றொழில் செய்ய வேண்டாம் என திணைக்களம் கடற்றொழிலாளர் மற்றும் கடற்றொழிலாளர்களுக்கு அறிவித்துள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே