வாய்க்காலில் பாய்ந்தது இ.போ.ச.பேருந்து! இருவருக்கு நடந்த விபரீதம்

#SriLanka #Accident #Bus
Mayoorikka
2 years ago
வாய்க்காலில் பாய்ந்தது இ.போ.ச.பேருந்து! இருவருக்கு நடந்த விபரீதம்

இ.போ.ச பேருந்தொன்று வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளானதில் இருவர் காயமடைந்த நிலையில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தொன்று பயணிகளுடன் நேற்றிரவு ( 28) அம்பாறை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த போது நேர் எதிரே மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை மீறி பேரூந்துடன் மோதும் வகையில் வந்துள்ளது.

images/content-image/2024/06/1719635945.jpg

 இதன்போது, விபத்தினை தவிர்ப்பதற்காக பேரூந்தின் சாரதி சுதாகரித்து பேரூந்தை நிறுத்த முற்பட்ட போது, அருகில் இருந்த நீர் வாய்க்காலுக்குள் பேருந்து பாய்ந்தது. குறித்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த நபர் மற்றும் பேரூந்து நடத்துநர் ஆகியோர் காயமடைந்த நிலையில் 1990 சுவ செரிய நோயாளர் காவு வண்டி ஊடாக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் விபத்து இடம்பெற்ற அம்பாறை - வங்களாவடி பிரதான வீதிக்கு வருகை தந்த போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் விபத்துக்குள்ளான பேரூந்தை மீட்கும் பணி நடைபெற்று வருகின்றது.

 அத்துடன் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான குறித்த பேருந்தில் 40க்கும் அதிகமான பொதுமக்கள் பயணம் செய்துள்ளனர்.

images/content-image/2024/06/1719635959.jpg

 பேரூந்து விபத்திற்குள்ளான போது சிலர் அதிர்ச்சியடைந்திருந்த நிலையில், மாற்று வாகனங்களில் அவர்கள் ஏற்றப்பட்டு அவர்களது சொந்த இடத்திற்கு அப்பகுதி மக்களின் ஒத்துழைப்புடன் அனுப்பி வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4