இரணைமடுக் குளத்தில் நீராடச் சென்ற சிறுவன் மாயம்: தேடும் பனி தீவிரம்

#SriLanka #Kilinochchi
Mayoorikka
2 years ago
இரணைமடுக் குளத்தில் நீராடச் சென்ற சிறுவன் மாயம்: தேடும் பனி தீவிரம்

இரணைமடுக் குளத்தில் நீராடச் சென்ற 14 வயது சிறுவர் காணாமல் போன நிலையில் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

 கிளிநொச்சி நீர்ப்பாசன குளமான இரணைமடுக் குளத்தில் நீராடுவதற்காக காணாமல் போன சிறுவனும், அவனது சகோதரன் மற்றும் இரு நண்பர்களுமாக சென்றுள்ளார்.

images/content-image/2024/06/1719655377.jpg

 காலை 11.30 மணியளவில் நீராடச் சென்ற இவர்களில் செல்வரத்தினம் றுசாந்தன் எனும் 14 வயதுடைய சிறுவன் நீர்ல் மூழ்கிய நிலையில் அருகில் உள்ள இராணுவ முகாமிற்கும், உறவினர்களிற்கும் தகவல் வழங்கியுள்ளனர்.

images/content-image2024/1719655426.jpg

 இந்த நிலையில் குறித்த சிவனை தேடும் பணியில் இரணைமடு மீனவர்களுகும், பிரதேச மக்களுமாக தேடி வருகின்றனர்.


 காணாமல் போன சிறுவன் திருமுறிகண்டி இந்து வித்தியாலயத்தில் தரம் 9ல் கல்வி கற்று வருவதுடன், முறிகண்டி வசந்தநகர் பகுதியில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4