இலங்கை கடற்படையால் கைது செய்த மீனவர்களை விடுதலை செய்ய கோரி ராமேஸ்வரத்தில் போராட்டம்

#India #SriLanka #Tamil Nadu #Arrest #Protest #Fisherman
Mayoorikka
2 years ago
இலங்கை கடற்படையால் கைது செய்த மீனவர்களை விடுதலை செய்ய கோரி ராமேஸ்வரத்தில் போராட்டம்

எல்லை தாண்டி மீன்பிடித்தத குற்றச்சாட்டில் 4 படகுகளுடன் கைது செய்யப்பட்ட 25 இந்திய கைது, செய்ததை கண்டித்தும் அவர்களை விடுதலை செய்யக் கோரியும் இந்திய தமிழ்நாடு பாம்பன் மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம் ஒன்றினை இன்று காலை முன்னெடுத்துள்ளனர்.

 இதில் மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய கோரி பாம்பன் சாலை பாலத்தில் மீனவர்கள் வீதி மறியல் போராட்டத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஈடுபட்டனர். மீனவர்களின் வீதி மறியல் போராட்டத்தால் மதுரை தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 இந்நிலையில் பாம்பன் பகுதி நாட்டு படகு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்ததை கண்டித்து சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மீனவர்கள் கடலில் இறங்கி குறித்த மீனவர்களை விடுவிக்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 இதனையடுத்து அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் மீனவர்கள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ள நிலையில் மீனவர்கள் விடுதலை செய்யப்படாவிட்டால் மீனவர்கள் போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர்.

 இந்த வயிற்று பிழைப்புக்காக மீன்பிடிக்க சென்ற மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என மீனவரின் உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர் குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 50க்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று அதிகாலை மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

 இந்நிலையில் நெடுந்தீவு கடற் பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது அப்பதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் 4 நாட்டு படகுகளையும் அதிலிருந்த இருதயராஜ், கிரேசியான், லயோனஸ் உள்ளிட்ட 25 மீனவர்களையும் கைது செய்து காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றிருந்தனர்.

 அங்கு முதல் கட்ட விசாரணைகளுக்கு பின்னர் மீனவர்கள் அனைவரையும் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் உரிய சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைக்க உள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4